News Tidbits ஆகஸ்ட் 19: இன்றைய தலைப்புச் செய்திகள் சில...
இன்றைய தலைப்புச் செய்திகளின் செய்திச்சுருக்கம்...
புதுடெல்லி: இன்றைய தலைப்புச் செய்திகள் சில உங்களுக்காக சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.
கட்டுமான உபகரணங்களின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவுக்கான 8,01,518 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில்; 60,091 பேர் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் உதவியுடன் கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்னும் முன்னேறவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லி ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாயத் துறை ஏற்றுமதி 23% அதிகரித்துள்ளது. கோதுமை, பருப்பு வகைகள், கடலை எண்ணெய் உள்ளிட பல பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்த்ருக்கிறது.
தேர்தல்களின் போது நேரடியாக களத்திற்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பான சமூக விலகலுக்கான வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்து வருகிறது.
கடற்படைத் தளபதிகள் மாநாடு 2020 புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சடற்படையின் முக்கிய செயல்பாடுகள், பொருட்கள், தளவாடங்கள், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கடற்படைத் தலைவர் மற்றும் தளபதிகள் ஆய்வு செய்வார்கள்.
மாலி நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே உள்ளிட்ட பலர் ராணுவ கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கெய்ரா தலைமையிலான அரசு பதவியேற்றது. தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக புரட்சி வெடித்தது.
தங்கத்தின் விலை குறைந்தது. சவரன் ஒன்றுக்கு 168 ரூபாய் குறைவு...