ஐதராபாத்: ஐ.எஸ் அமைப்புக்கு பணம் வசூலித்தவர் கைது
ஐதராபாத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய யாசிர் நியாமதுல்லா மற்றும் அதாவுல்லா ரெஹ்மான் என்பவர்களை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளது.
அவர்கள், பயங்கரவாத அமைப்பபான ஐஎஸ் அமைப்புக்கு பணம் வசூலித்து கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐதராபாத் நகரில் 5 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.