நிபா வைரஸ், சமீபத்திய புதுப்பிப்பு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பீதியை ஏற்படுத்திய நிபா வைரஸ் தற்சமயம் கட்டுக்குள் உள்ளதாகவும், ஆனால் அதன் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தற்போது நிபாவின் இரண்டாவது அலை பரவுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர் கூறினார். ஆய்வுக் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் , “நிபா வைரஸ் அச்சுறுத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டதாகக் கூற முடியாது. ஆனால் தற்போது இந்த நோய் பலருக்கு பரவாமல் இருப்பது நிம்மதி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள முதல்வர் பினராயி விஜயன், “நிபா பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு ஆனால் அதை முழுமையாக நிராகரிக்க முடியாது என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.” என்று மேலும் கூறினார்.


கொடிய வைரஸ் பரவுவதை மாநில சுகாதார அமைப்பு திறம்பட தடுக்க முடியும் என்று விஜயன் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து தெரிவித்த அவர், “சுகாதார அமைப்பு கவனமாக செயல்பட்டு வருகிறது. வைரஸ் முன்கூட்டியே, சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் ஆபத்தான சூழ்நிலை தவிர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தொற்று ஏன் பரவுகிறது என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) தெளிவான பதிலை அளிக்க முடியவில்லை என்று முதல்வர் கூறினார்.


36 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவற்றில் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். வரும் நாட்களில் கூடுதல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். காவல்துறை உதவியுடன் முதலில் பாதிக்கப்பட்ட நபரின் 'ரூட் மேப்' எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர், இந்த இடங்களில் இருந்து வௌவால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றார். 


மேலும் படிக்க | நிபா வைரஸ்: தொற்று வீதம் குறைவு.. ஆனால் ஆபத்து அதிகம், பீதியில் கேரளா!!


கோழிக்கோட்டில் ஏன் இந்த நோய் மீண்டும் வந்துள்ளது என்பதற்கு ஐசிஎம்ஆர் (ICMR) இடம் கூட தெளிவான பதில் இல்லை என்று விஜயன் கூறினார். இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார் அவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகம் மற்றும் அருகிலுள்ள தொன்னக்கல்லில் உள்ள 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு வைராலஜி லேப்' ஆகியவற்றில் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று விஜயன் கூறினார்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “தற்போது 994 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.” என்று தரவுகளை தெளிவுபடுத்தினார். இதனுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஒன்பது பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


நிபா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறையும் மனோ-சமூக ஆதரவுக் குழுவை அமைத்துள்ளதாக முதல்வர் கூறினார். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பாதிப்புகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. 


கேரளாவில் நிபா வைரஸ் அபாயம் தலைதூக்கியுள்ள நிலையில், இந்தியாவின் பிற மாநிலங்களும் இந்த வைரஸ் குறித்த உஷார் நிலையில் உள்ளன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன. 


மேலும் படிக்க | மிரட்டும் நிபா வைரஸ்.. பீதியில் மக்கள்: மேலும் ஒருவர் பாதிப்பு, கேரளாவில் ஹை அலர்ட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ