நிபா வைரஸ் அலர்ட்! பாதிப்புகள், அறிகுறிகள் என்ன..? தற்காத்துக்கொள்வது எப்படி..?

Nipah Virus Meaning, Causes and Preventiion: கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிரது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன..? இதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது..?  

Written by - Yuvashree | Last Updated : Sep 14, 2023, 01:49 PM IST
  • கேரளா, கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
  • நிபா வைரஸ் தொற்று மிருகங்களிடம் மனிதர்களுக்கு பரவுகிறது.
  • நிபா வைரஸின் அறிகுறிகள் என்ன..? இதிலிருந்து தப்பிப்பது எப்படி..?
நிபா வைரஸ் அலர்ட்!  பாதிப்புகள், அறிகுறிகள் என்ன..? தற்காத்துக்கொள்வது எப்படி..?  title=

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து தற்போது வரை மூன்றாவது முறையாக இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை 4 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இருவர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்கள் நிபா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். 

நிபா வைரஸ் என்றால் என்ன..? 

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின் படி, நிபா வைரஸ் மிருகங்களால் மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றாக அறியப்படுகிறது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் முலமாகவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாகவும் இந்த தொற்று பரவுமாம். மலேசியாவில்தான் முதன் முதலில் மனிதர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிகளினால் இந்த தொற்று பரவியதாக கூறப்பட்டது. வங்காள தேசம் மற்றும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்று பரவியது. வவ்வாள்களின் எச்சம் அடங்கிய பழங்களால் இந்த தொற்று பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. 

மேலும் படிக்க | 7 நாளில் 7 கிலோ எடை இழக்கும் சவாலுக்கு தயாரா... ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

நிபா வைரஸிற்கான அறிகுறிகள் என்னென்ன..?

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஒரு சிலருக்கு தலைசுற்றல், அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இருப்போர் 4 முதல் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக இதற்கான மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுருத்துகின்றனர்.

இது கடுமையான நோய் பாதிப்பா..?

நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் முழுமையாக குணமடைவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.. இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரில் 40-75 சதவிகிதம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. நிபா வைரஸ் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டோருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் கோமா நிலைக்கு சென்று விடுவதாகவும் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம். 

மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை..!

நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை எனவும் அந்த நிறுவனம் தங்களது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. பொதுவாக, மிருகங்களை வளர்க்கும் பண்ணையில் இருந்துதான் இந்த நோய் தொற்றானது பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு மிருகத்திற்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது இருக்கும் இடம் மற்றும் அந்த இடத்தில் இருப்போர் தனிமை படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த மிருகம் இறந்த பிறகு பாதுகாப்பான முறையில் அதன் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்..? 

நிபா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைதேர்ந்த மருத்துவர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர். அவை என்னென்ன..?

>அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 

>உடல் நிலை சரியில்லாத மிருகங்களை தொடுவதையோ அதனுடன் தொடர்பில் இருப்பதையோ தவிர்க்க வேண்டும். குறிப்பாக பன்றிகள் மற்றும் வவ்வால்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

>நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மிருகங்களினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பன்றி இறைச்சி, பேரிச்சம்பழத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கள்ளு உள்ளிட்டவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

>வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருக்க கூடாது. 

>நிபா வைரஸ் தொற்று அறியப்பட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

>பழங்கள், காய்கறிகள் என எதை சாப்பிடுவதற்கு முன்பும் அவற்றை சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர் அதன் தோல்களை நீக்கிவிட்டு சாப்பிடலாம். காய்கறிகளை நன்கு கொதிக்க வைத்த பிறகு சமைக்கலாம். 

>வவ்வால்கள் அதிகம் தங்கும் மரங்கள் அல்லது புதர்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும். 

>நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எச்சில், ரத்தம், கழிவுகளுடன் தொடர்பில் இருக்க கூடாது. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை: முருங்கை அனைத்திலும் பயன் தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News