சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் எனும் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை இந்திய ராணுவம் ஏற்காமல் தடுத்து தடை விதித்தது. இதனால் ஏற்பட்ட மோதலால் இருநாடுகளும் அங்கு படைகளை குவித்ததால் போர் பதற்றம் நிலவியது.வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றன.


இந்நிலையில், டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அடுத்த மாத இறுதியில் சீனா பயணம் செல்லவுள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆனால், சீனா செல்வதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.


இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்லவுள்ளார்.