குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் சுமார் 2 மணி நேரத்திற்கு விமானங்கள் பறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த விழாவில் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் ஒத்திகை நடக்கும் நாட்களிலும், குடியரசு தினத்தன்றும் டெல்லியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்கு (காலை 10.35 மணி முதல் 12.15 மணி) விமானங்கள் பறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஜனவரி 18 துவங்கி ஜனவரி 26-ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்த  நாட்களில் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. வருகிற 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். சுமார் 3 மணி நேரம் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.