உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் விவகாரத்து என்பது குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் சில சமயங்களில் திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்று விடுகிறது. இருப்பினும், விவாகரத்து வழக்கில் எல்லாம் உடனடியாக எதுவும் நடக்காது. நமது நாட்டில் விவகாரத்திற்கும் சில குறிப்பிட்ட சட்டங்கள் இருக்கிறது. அதாவது விவகாரத்திற்குப் பின், தம்பதிகளுக்கு கவுன்சிலிங், பிரிந்து இருக்கும் காலம் எனப் பல விஷயங்கள், விதிகள் இதில் உள்ளன. இந்நிலையில்,இன்று, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, விவகாரத்துத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவாகரத்து தொடர்பாக முக்கியத் தீர்ப்பில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்ய முடியவில்லை என்றால்,  விவாகரத்து வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டப்பிரிவு 142-ன் கீழ் மோசமான திருமண முறிவு என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன் கீழ் பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெற ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலம் தேவை என்ற விதியை நீக்கிவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இதில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளும்  விதிக்கப்பட்டுள்ளது.


நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் அவ்வாறு விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியது. அதே போல தவிர்க்க முடியாத இந்த திருமண முறிவு எப்போது ஏற்படும் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய காரணங்களையும் நீதிபதிகள் வகுத்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரிய ஷில்பா சைலேஷ் எதிராக வருண் சீனிவாசன் 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குடும்பநல நீதிமன்றங்களில் நடக்கும் நீண்ட விசாரணைகளைத் தவிர்த்து நேரடியாகப் பரஸ்பர சம்மதம் இருந்தால் விவகாரத்து பெற முடியுமா என்பதே வழக்காகும்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்


இந்து திருமணச் சட்டம் 1955 இன் பிரிவு 13 பி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது. பிரிவு 13(பி) 1, இரு தரப்பினரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறுகிறது. ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக அவர்கள் தனித்தனியாக வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் ஒன்றாக வாழ முடியாது அல்லது திருமணத்தை முறித்துக் கொள்ள பரஸ்பரம் ஒப்புதல் போன்ற வழக்குகளில் விவாகரத்து பெற மனு தாக்கல் செய்யப்படுகிறது.


விவாகரத்து கோரும் இரு தரப்பினரும் விண்ணப்பத்தை தாக்கல் செய்த நாளிலிருந்து 6 முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று பிரிவு 13(பி) 2 கூறுகிறது. ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படுவதற்கான நோக்கம், தம்பதிகள் மனம் மாறினால், அவர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறலாம். இதன் மூலம் திருமண பந்தம் காப்பாற்றப்படும் என்பதே இதன் நோக்கம்.


இந்த காலத்திற்குப் பிறகு, நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து, திருப்தி அடைந்தால், விவாகரத்து உத்தரவைப் பிறப்பிக்க முடியும். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து திருமணம் முறிந்ததாகக் கருதப்படும். இருப்பினும், திருமணம் முடிந்து குறைந்தது ஒரு வருடம் கடந்துவிட்டால் இந்த விதிகள் பொருந்தும்.


திருமணத்திற்கு புறம்பான உறவு, கொடுமை, மதம் மாறுதல், மனநலக் கோளாறு, தொழுநோய், பாலியல் நோய், வாழ்க்கைத் துணைவர்களில் யாரேனும் ஒருவர் சன்யாசம் பெறலாம் அல்லது மரணம் குறித்த அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து கோரலாம். மிகவும் விதிவிலக்கான, ஒழுக்கக்கேடு சார்ந்த  வழக்கில், விவாகரத்துக்கான விண்ணப்பம் பிரிவு 14 இன் கீழ், திருமணமாகி ஒரு வருடம் நிறைவடையாமல் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | LGBTQI: தன்பாலின திருமணம் என்று அழைக்கலாமா? இல்லை திருமண சமத்துவ உரிமைகள் என்பது சரியா?


பிரிவு 13(பி) 2ன் கீழ் ஆறு மாத கட்டாயக் காலமும் விலக்கு அளிக்கப்படலாம். இதற்கு குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுக்க வேண்டும். 2021ல், அமித் குமார் vs சுமன் பெனிவால் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில், 'சமரசம் ஏற்படும் என்ற சிறிய நம்பிக்கை கூட இருந்தால் கூட, பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கையில், விவாகரத்துக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் காலம் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், தீர்வுக்கான சிறிய வாய்ப்பு கூட இல்லை என்றால், இரு தரப்பினருக்கும் இடையிலான  துன்பகரமான காலகட்டத்தை அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.


விவாகரத்து செயல்முறையைத் தொடங்க இரு தரப்பினரும் குடும்ப நீதிமன்றத்தை அணுகலாம். இந்த செயல்முறை நிறைய  காலம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கணவனும் மனைவியும் முன்கூட்டியே விவாகரத்து செய்ய விரும்பினால், அவர்கள் திருமணத்தை முறித்து கொள்ல சட்டப்பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.


பிரிவு 142 இன் துணைப்பிரிவு 1ன் கீழ், உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் தன் முன் இருக்கும் எந்த ஒரு வழக்கிலும் முழுமையான நீதி கிடைக்க தேவையான உத்தரவுகளை வழங்க முடியும். இதன் கீழ் இன்றைய உத்தரவும் வந்துள்ள நிலையில் கணவன்-மனைவி விவாகரத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை, இதுபோன்ற அனைத்து மனுக்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும்.


மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ