கொரோனா வைரஸ்: ஹைதராபாத்தில் உள்ள எர்ரகட்டாவின் (Erragadda) மார்பு மருத்துவமனையில் திங்களன்று ஷாஜியா அவரது கணவர் மற்றும் நான்கு குழந்தைகள் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டானர். அதில் அவர்களுக்கு எதிர்மறை சோதனை (Negative) வந்தது. சோதனை முடிவுகள் அன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வந்தன. குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வெளியேற மாலை 6 மணியாகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததால், பொது போக்குவரத்துக்கு வழியில்லை. அந்த குடும்பத்தின் ஆறு பேரும் வாகனங்கள் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவி செய்ய மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என யாரும் முன் வரவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து பேசிய ஷாஜியா, "நெடுஞ்சாலை வெறிச்சோடி இருந்தது. நாங்கள் உதவி கோரி போலீஸ் சோதனைச் சாவடியை அணுகினோம். ஆனால் காவல்துறையினர் எங்களை அங்கிருந்து செல்லுமாறு என்று கூறினார்கள் ஒழிய, ஊரடங்கு உத்தரவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் எதற்காக வந்தார்கள்? என்ன பிரச்சனை? என்று காவல்துறை கேட்கவில்லை என்றார்.


அன்று மாலை தனது கணவர் 100 பேரிடம் உதவி கோரியதாக ஷாஜியா கூறுகிறார். ஆனால் யாரும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அவசர சேவை எண்ணை தொடர்புக்கொண்டு எங்கள் நிலைமையை கூறினோம். ஆனால் பாதியிலேயே இணைப்பை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை" என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.


ஒருபக்கம் எந்த உதவியும் கிடைக்கவில்லை, மறுபக்கம் குழந்தைகளுக்கு தாகமும் பசியும் வரத் தொடங்கியதால், விரக்தியில் இருந்த ஷாஜியா ஒரு சமூக ஆர்வலரை தொடர்புக் கொண்டுள்ளார். அதன்பிறகு சாலையில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தை பற்றி எஸ்.ஆர் காவல் நிலையத்துக்கு சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உதவி அனுப்புவதாக உறுதியளித்தார். ஆனால் யாரும் வரவில்லை, 


இறுதியாக எங்கள் வீட்டை அடைய எங்களுக்கு உதவி செய்யும் ஒரு உறவினரிடம் நாங்கள் இறுதியாக கேட்க வேண்டியிருந்தது என்று ஷாஜியா கூறுகிறார்.


இந்த குடும்பம் மருத்துவமனையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள ஓல்ட் சிட்டியில் 146 கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஒன்றில் வசிக்கிறது. கிளினிக்கில் பணிபுரிந்த ஷாஜியாவின் கணவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் சோதனை செய்யப்பட்டனர் குறிப்பிடத்ததக்கது.


ஹைதராபாத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ( Mahindra Logistics -MLL) அலைட் கேப் சேவைகளுடன் நகர காவல்துறையினர் ஒத்துழைப்புடன் அழைப்பு மையத்தை அமைத்துள்ளது. மேலும் பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 ஐ டயல் செய்ய வேண்டும் அல்லது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல வேண்டும். 


ஏப்ரல் 19 நிலவரப்படி, மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் சேவையின் கால் சென்டருக்கு 565 அழைப்புகள் வந்தன, அவற்றில் 223 கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. 342 ஏற்றுக்கொள்ளப்பட்டன.