டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மழை காரணமாக, தில்லி, நொய்டா, கஜியாபாத் போன்ற பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மழை காரணமாக கிரேட்டர் நொய்டாவில் ஒரு கட்டிடத்தின் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது என செய்திகள் வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து கிரேட்டர் நொய்டா போலீஸ் துணை கண்காணிப்பாளர் பியுஷ் குமார் சிங் கூறியது, காலை சுமார் பத்து மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. பிலாஸ்பூரில் ஏற்ப்பட்ட இந்த கட்டிடத்தில் கபீர் மகன் ஹனீஃப் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த கட்டிடம் விழுந்ததில் கபீர் மற்றும் அவரது மனைவி ஷேக்கிலா இடிபாடுகளில் சிக்கினர்.


அக்கம் பக்கத்தினர் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர், ஷேக்கிலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். கபீருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


கபீர் தம்பதியருக்கு மொத்தம் 7 குழந்தைகள். இவர் வாரக் கூலிக்கு சென்று, தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் குழந்தைகள் வீட்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பித்தார்கள்.


கடந்த இரண்டு மாதங்களில் மழை காரணமாக கிரேட்டர் நொய்டாவின் பல இடங்களில் கட்டிடங்கள் வீழ்ச்சியடைந்ததாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.