Online-ல கார வித்துட்டு offline-ல அதே கார திருடிய நோய்டாவின் தில்லாலங்கடி!!
ஒரு வினோதமான மோசடி சம்பவத்தில், நோய்டாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது சொந்த காரை ஈ-காமர்ஸ் தளத்தில் விற்ற பின்னர் அதை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நோய்டா: பல வித வினோதமான திருட்டு சம்பவங்களைப் பற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். சில நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன, சில அதிசயிக்க வைக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு வினோதமான மோசடி சம்பவத்தில், நோய்டாவில் (Noida) 28 வயதான நபர் ஒருவர் தனது சொந்த காரை ஈ-காமர்ஸ் (E Commerce) தளத்தில் விற்ற பின்னர் அதை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, ஜீத் யாதவ் என்ற நபர் ஒரு Maruti Swift VXI பழைய காரின் விளம்பரத்தை பார்த்தார். மனோத்தம் தியாகி என்ற விற்பனையாளரைத் தொடர்பு கொண்ட யாதவ், ரூ .2.60 லட்சம் என்ற விலையில் ஒப்பந்தத்தை நிர்ணயித்தார்.
இருப்பினும், அவர் விற்பனையாளரைச் சந்தித்தபோது, காரை விற்ற தியாகி அசல் வாகன பதிவு ஆவணங்கள் மற்றும் ஒரு சாவியை அவருடனே வைத்துக்கொண்டார். அவற்றை பின்னர் தருவதாக அவர் யாதவுக்கு உறுதியளித்தார்.
ஒப்பந்தத்தின்படி, யாதவ் 2.10 லட்சம் ரூபாயை அந்த இடத்திலேயே செலுத்தி, மீதமுள்ள தொகையை சாவி மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்ட பிறகு கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அடுத்த நாள், யாதவ் தனது அலுவலகத்திற்கு வெளியே செக்டர் 12 இல் காரை நிறுத்தியபோது, கார் திருடப்பட்டது!
ALSO READ: Blue Moon 2020: நீல வானில் நீல நிலவு: அக்டோபர் 31 அன்று காணலாம் இந்த நேரத்தில்!!
திருட்டுக்குப் பிறகு, யாதவ் FIR பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். வெஸ்ட் கிரேட்டர் நொய்டா அருகே சந்தேகத்திற்குரிய ஒரு நபரின் நடமாட்டம் குறித்த தகவல்களைப் பெற்றனர்.
"ஒரு போலிஸ் குழு அந்த இடத்தை அடைந்து அந்த நபரை சோதனைக்கு நிற்குமாறு குறியது. அவரது வாகனத்தில் முறையற்ற நம்பர் பிளேட் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். போலீஸ்காரர்கள் கேட்ட பல கெள்விகளுக்குப் பிறகு அந்த நபர் வாகனத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்” என்று எஸ்.எச்.ஓ கூறினார்.
விசாரணையின் போது, தியாகி காரில் இருந்த GPS கண்காணிப்பு சாதனத்தின் மூலம் யாதவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது தெரிய வந்தது. அவர் தன்னிடம் வைத்திருந்த சாவியைப் பயன்படுத்தி காரைத் திருடினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இப்படிப்பட்ட குற்றத்தை செய்தது இது முதன்முறையல்ல. இதே வழிமுறையைப் பயன்படுத்தி, அவர் இதற்கு முன்பும் பலரை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது!
ALSO READ: இந்த Tea-யின் விலை Rs.75,000/kg: அட, அப்படி என்னங்க இருக்கு இதுல!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR