இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி போல் போலி ID கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷோயா கான் என்ற 33 வயதுடைய பெண் டெல்லியில் M.A பொலிடிகல் சையன்ஸ் படித்த அவர் அதை தொடர்ந்து IAS அதிகாரியாக வேண்டும் என கடந்த 2007ஆம் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்த தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசைப்பட்ட அவர் சில குறுக்கு வழிகளை கையாண்டுள்ளார்.


இந்நிலையில், அவர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ID கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி செல்போன் செயலிமூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார். இவருக்கு மட்டும் இன்றி இஅவரது கணவருக்கும் இவர் போலியான அடையாள அட்டைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும், அவர் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வற தொடங்கியுள்ளார். காவல்துறையினர் பாதுகாப்பு, கார், உணவும் என ஆடம்பரமாக 18 மாதங்கள் இவர் ஒரு அதிகாரி போலவே இருந்துள்ளார். 


இந்நிலையில் இவர் உ.பி-யில் உள்ள நொய்டா கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார். இதையடுத்து, சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர் வீட்டை சோதனை, விசாரணை உத்தரவிட்டுள்ளனர். 


அப்போது, நடத்திய விசாரணையில் அவர் உண்மையான அதிகாரியே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் போலியான ID கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். 


போலீசார் தெரிவித்த தகவலின்படி, "இந்த ஜோடி அண்மையில் மீரட்டில் இருந்து கிரேட்டர் நொய்டாவுக்கு மாற்றப்பட்டது, அங்கு அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தந்திரத்தை இழுத்தனர். அவரது கணவர் ஹர்ஷ் பிரதாப் (29) தற்போது சிவில் சர்வீசஸ் பரிசோதனையைத் தயாரித்து வருகிறார். சமுதாயத்தில் தங்கள் வர்ணனை காட்ட தம்பதியர் அந்த சதித்திட்டத்தின் பகுதியாகவும் உள்ளனர். மீரட்டில், அவர்கள் ஆடம்பர எஸ்.யூ.வி.க்களை போலீஸார் சந்திப்புப் புள்ளியிடம் கொண்டு வந்தனர், அங்கு அவர்கள் எட்வார்ட் வாகனங்களை வழங்கினர், "என எஸ்.பி.எஸ்.


இதையடுத்து, காவல்துறையினர் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி 419, 420, 467, 468, 471 ஆகியசட்டந்த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.