புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு கும்பலாக வந்த சில நக்சலைட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219 படைப் பிரிவை சேர்ந்த 11 வீரர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.


படுகாயங்களுடன் முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த கொடூர தாக்குதலின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.


இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைந்து சென்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பலியான வீரர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில், நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 12 வீரர்கள் பலியான சம்பவத்துக்கும் துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என ராஜ்நாத் சிங் தீர்மானித்துள்ளதாக மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.