பத்ம பூஷண் விருதை ஏற்க மறுக்கும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர், வங்காள பாடகி!
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், பொது நிர்வாகம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், பத்ம விபூஷண், பத்ம பூஷண், பதம்ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், பொது நிர்வாகம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், பத்ம விபூஷண், பத்ம பூஷண், பதம்ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், நேற்று மத்திய அரசு தனக்கு அளித்துள்ள பத்ம பூஷண் விருதை வாங்கப் போவதில்லை எனவும் அதனை திருப்பி அளிப்பதாகவும் மேற்கு வங்க முன்னாள் முதல் அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆன புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
அதை அடுத்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியும் பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துவிட்டார்.
உரிய நேரத்தில் வழங்கப்படாமல், வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் மரியாதை கிடைத்ததால் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சந்தியா முகர்ஜியின் மகள் சௌமி சென்குப்தா, மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து மரியாதை குறித்து தெரிவித்ததாகவும், அதற்கு ஏற்க சந்தியா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அவரைப் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ வழங்குவது மிகவும் அவமானகரமானது என்று அவர் கூறினார்.
ALSO READ | பத்ம விருதுகள் 2022: சுந்தர் பிச்சை, நீரஜ் சோப்ராவுக்கு விருது!
பத்ம விருதை ஏற்காத நிகழ்வுகள் பொதுவாக, மிகக் குறைவு, ஏனெனில் விருது பெற்றவர்களுக்கு முன்கூட்டியே இது குறித்து தெரிவிக்கப்படுகிறது. அவர் விருதை ஏற்றுக்கொள்ளவதாக ஒப்புக்கொண்ட பின்னரே அவரது பெயர் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுகள் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசு தலைவரால் (President) ராஷ்ட்ரபதி பவனில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.128 சாதனையாளர்களுக்கு பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ போன்ற 'பத்ம விருதுகள்' வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது.
ALSO READ | ‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR