ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் காலமானார்: தற்கொலையா? தொடர்கிறது விசாரணை
NTR`s daughter Uma Maheshwari passes away: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் கந்தமனேனி உமா மகேஸ்வரி ஐதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் கந்தமனேனி உமா மகேஸ்வரி ஐதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார். தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) நிறுவனரின் 12 குழந்தைகளில் இளையவரான அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திங்கள்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்கொலை குறித்து இன்னும் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. உமா மகேஸ்வரியின் மறைவு நந்தமுரி குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நான்கு சகோதரிகளில் அவர் இளையவராவார்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 174 சிஆர்பிசி (தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க போலீசார்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி அவரது நன்கு அறியப்பட்ட சகோதரிகள் ஆவர்.
செய்தி கேட்டு, சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பிற குடும்பத்தினர் மகேஸ்வரி இல்லத்திற்கு விரைந்தனர்.
மேலும் படிக்க | டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்
உமா மகேஸ்வரியின் சகோதரர் பிரபல டோலிவுட் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான என். பாலகிருஷ்ணா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஆர் என பிரபலமாக அறியப்பட்ட என்.டி. ராமராவ் மிக பிரபலமான தெலுங்கு தலைவர்களில் ஒருவர். நடிகராக இருந்து பின்னர் அரசியல்வாதியான இவர், தெலுங்கு சுயமரியாதை முழக்கத்தில் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியை உருவாக்கி, ஒன்பது மாதங்களுக்குள் கட்சியை ஆட்சியை பிடிக்க வைத்தார். அப்போது பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸின் ஒற்றைக் கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.
அவர் தனது மருமகன் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, 1996 இல் தனது 72 ஆவது வயதில் இறந்தார்.
என்டிஆருக்கு எட்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள். உமா மகேஸ்வரி நான்கு மகள்களில் இளையவர். சமீபத்தில் உமா மகேஸ்வரியின் மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் பலரும் வந்திருந்தனர்.
நடிகரும், முன்னாள் அமைச்சருமான ஹரிகிருஷ்ணா உட்பட என்டிஆரின் மூன்று மகன்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
மேலும் படிக்க | ப்ரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்கள் - பிரதமரின் வேண்டுகோள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ