ஓகி புயல்: 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்
ஓகி புயலில் சிக்கி தத்தளித்த தமிழக மீனவர்கள் உட்பட 952 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் துகாப்பாக கரை ஒதுங்கினர். அவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை உரிய வசதிகள் செய்து தரப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஓகி புயலில் சிக்கி தத்தளித்த தமிழக மீனவர்கள் உட்பட 952 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் துகாப்பாக கரை ஒதுங்கினர். அவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை உரிய வசதிகள் செய்து தரப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதை அடுத்து கடந்த 3 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து இதுவரை 400 பேர் மீட்கப்பட்டனர். எனினும் முழுமையான மீட்பு பணியில் மீதம் உள்ளவர்களையும் மீட்க வேண்டும் என கேரளா மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1000-க்கும் அதிகமான மீனவர்களின் நிலைமை என்னவானது என்றும் தெரியவில்லை. இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் பகுதியில் 66 படகுகளுடன் 952 மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளனர். இதில் 2 படகுகளில் தமிழக மீனவர்கள் இருக்கின்றனர். பருவ நிலை சீரமடைந்து மீனவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவியதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.