ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்
Odisha Train Accident Updates: `ஒடிசா ரயில் விபத்துகளுக்குக் காரணமான குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், கடுமையான தண்டனை வழங்கப்படும்`: பிரதமர் மோடியின் சூளுரை
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அதன் பிறகு கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை பிரதமர் சந்தித்தார். பிரதமர் மோடியுடன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்த விபத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று கூறினார். அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பிரதமர் மோடி, "இது வேதனையளிக்கும் விபத்து. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இது ஒரு தீவிரமான சம்பவம், அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் பலி, 900 பேர் காயம்!
தற்போது, விபத்து நடந்த பகுதியில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களை நான் சந்தித்தேன். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்.
புவனேஸ்வரில் இருந்து வடக்கே சுமார் 170 கிமீ தொலைவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா பஜார் ஸ்டேஷன் அருகே விமானப்படை ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி தரையிறங்கினார். விபத்தில் காயமடைந்தவர்களை பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அவர் சந்தித்தார்.
பிரதமர் சம்பவ இடத்தில் இருந்து, கேபினட் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் பேசினார். காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் http://ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஹவுராவிலிருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின.
உயிரிழந்த குடும்பங்கள் எந்தவித இடையூறையும் சந்திக்காமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த தொடர் விபத்துகள், தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்தா அல்லது மனித தவறால் ஏற்பட்ட விபத்தா என பல கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து! பயணிகளின் நிலை என்ன? கள நிலவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ