வழக்கை ஒத்திவைத்த நீதிபதி... கத்தியை காட்டிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு
ஒடிசாவில் நீதிமன்றத்தின் விசாரணை அரங்கில், ஒரு குற்றவாளி, நீதிபதியிடம் கத்தியைக் காட்டி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டதில் பெர்ஹாம்பூர் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில், வாரத்தின் முதல் வேலை நாளான நேற்று பெரும் பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த நீதிமன்றத்தில்,பெர்ஹாம்பூர்துணை-பிரிவு நீதித்துறை நீதிபதி பிரக்யான் பரமிதா பிரதிஹாரி என்பவர் நேற்று நீதிமன்ற பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பெண் நீதிபதியான அவர், மதியம் பல்வேறு வழக்குகளை விசாரிக்கவும் தயாராகிக்கொண்டிருந்தார்.
பாகாபன் சாஹூ (50) என்பவரும் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரின் வழக்கும் மதியம், நீதிபதி பிரக்யானால் விசாரிக்கப்பட இருந்தது. அப்போது, நீதிமன்ற விசாரணை அரங்கில் நின்றுக்கொண்டிருந்த சாஹூ, திடீரென கத்தியை எடுத்து நீதிபதியை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதைக்கண்ட அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்கள், சாஹூவிடம் சாமர்த்தியமாக போராடி கத்தியை பிடிங்கி, நீதிபதியை மீட்டனர். இதையடுத்து, குற்றவாளி சாஹூ அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் நடந்துல்ளது. இதுகுறித்து, போலீசார் சாஹூவிடம் விசாரணை நடத்தினற். இதையடுத்து, பெர்ஹம்பூர் கால் கண்காணிப்பாளர் சரவண விவேக் கூறுகையில்,"சம்பவம் நடந்தபோது, வழக்காடு மன்றத்தில் சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.
வழக்காடு மன்றத்தில் நுழைந்த சாஹூ நேராக, குற்றவியல் நீதிபதி பிரக்யான் பரமிதாவின் மேசை அருகே சென்று, கத்தியை காட்டி அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அங்கிருந்த பணியாளர்களும், வழக்கறிஞர்கள் நீதிபதியை பாதுகாப்பாக மீட்டனர். தற்போது நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, சாஹூ கைதுசெய்யப்பட்டார்" என்றார்.
"சாஹூவிடம் விசாரித்தில், தன் வழக்கு விசாரணை அந்த நீதிபதி ஒத்திவைத்ததாக நீதிமன்ற பணியாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாஹூ இந்த செயலை செய்திருக்கலாம்" என ஐஜி சத்யபிரதா போய் தெரிவித்தார். கைதானா சாஹூ மீது கொலை முயற்சி உள்பட நான்கு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த மிரட்டலுக்கான காரணம் குறித்து விரிவான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர் விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | மிட் டே மீல்ஸ் வேணுமா? ஆதார் கார்டு அவசியம்! ஆனால் ஸ்கூல்ல சேர அது தேவையில்ல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ