மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபல நுண்கலை வடிவமைப்புக் கலைஞர் பென்சில் நுனி மற்றும் கல்லில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கம் வடிவமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குர்தா மாவட்டத்தில் உள்ள ஜத்னி கிராமத்தைச் சேர்ந்தவர் எல். ஈஸ்வர் ராவ். நுண்கலைக் கலைஞரான (மினியேச்சர் ஆர்டிஸ்ட்) இவர், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, பென்சில் நுனிப் பகுதி மற்றும் நான்கு சிறிய கற்களைக் கொண்டு 0.5 இன்ச் அளவில் இரு சிவலிங்கங்களை வடிவமைத்துள்ளார்.




நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 


அந்தவகையில் இன்று பென்சில் நுனிப் பகுதியில் 0.5 இன்ச் அளவில் இரு சிவலிங்கத்தை வடிவமைத்தது வியக்கவைத்துள்ளது. இவர் முதலில் கல்லில் வடிமைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு 2 நாள்களும், பென்சில் நுனியில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு ஒருநாளும் கால அவகாசம் தேவைப்பட்டதாகத் தெரிவித்தார்.