ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரியில் முதலை தாக்குதலில் உயிரிழந்த சிறுவன்...!!!
ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி மாவட்டத்தில் முதலை தாக்குதலில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்.
ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி மாவட்டத்தில் முதலை தாக்குதலில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்.
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் ஒரு நீர்த்தேக்கத்தில் 10 வயது சிறுவன் முதலை தாக்கியதில் கொல்லப்பட்டான் என்று போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். ஒடிசாவின் (Odisha) மல்கன்கிரி (Malkangiri) மாவட்டத்தில் ஒரு நீர்த்தேக்கத்தில் 10 வயது சிறுவன் முதலை (crocodile) தாக்கியதில் கொல்லப்பட்டான் என்ற செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்ரகொண்டாவில் உள்ள ஜொலகுடா ஆபரேட் காலனியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை அன்று பிற்பகல் குளிப்பதற்காக சிலேரு ஆற்றின் நீர்த்தேக்கத்திற்குச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ | லடாக் விவகாரத்தில் வலுக்கும் போராட்டம்; Zomato சீருடையை கிழித்தெறியும் ஊழியர்கள்...
அங்கு குளிக்க சென்ற சிறுவர்களில் ஒருவனான கைலாஷ் மாஜி என்ற சிறுவன், ஒரு முதலையினால் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டான் என அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
அங்கிருந்த சில உள்ளூர்வாசிகள், சம்பவம் நேரிட்ட பின்னர் அவரது சிதைந்த உடல் நீர்த்தேக்கத்தில் மிதப்பதைக் கண்டனர் என்றும் பின்னர் அவர்கள் தகவல் அனுப்பியதாகவும், பின்னர் காவல் துறையினர் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ALSO READ | அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!
நீர்த்தேக்கத்தில் மூன்று முதலைகளை அண்மையில் பார்த்ததாக கிராமவாசிகள் கூறினர். இது நீர்நிலைக்கு அருகில் சென்ற ஆடுகள் மற்றும் மாடுகளைத் தாக்கியதாகவும் அவர்கள் கூறினார். பயமறியாத இந்த சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளிக்க அந்த நீர் தேக்கத்திற்கு சென்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ள கோதாவரி நதியின் துணை நதியான சிலேரு என்ற நதியில் ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்கன்கிரி என்ற மாவட்டத்தில் பாலிமேலா என்ற நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பாலிமேலா நீர்த்தேக்கத்தின் மொத்த கொள் திறன் 3610 மில்லியன் கன மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்