லடாக் விவகாரத்தில் வலுக்கும் போராட்டம்; Zomato சீருடையை கிழித்தெறியும் ஊழியர்கள்...

லடாக் விவகாரத்தில் சீனா-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜொமோடோ(Zomato) ஊழியர்கள் தங்கள் சீருடைகளை தீயில் இட்டு எரித்துள்ளனர்.

Last Updated : Jun 28, 2020, 03:17 PM IST
  • கடந்த 2018-ஆம் ஆண்டில், சீனாவின் அலிபாபாவின் நிறுவனம், ஜொமாடோவில் 14.0 சதவீத பங்குகளுக்கு வாங்குவதற்காக சுமார் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த மே மாதத்தில், ஜொமாடோ 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
லடாக் விவகாரத்தில் வலுக்கும் போராட்டம்; Zomato சீருடையை கிழித்தெறியும் ஊழியர்கள்... title=

லடாக் விவகாரத்தில் சீனா-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜொமோடோ(Zomato) ஊழியர்கள் தங்கள் சீருடைகளை தீயில் இட்டு எரித்துள்ளனர்.

கடந்த வாரம் லடாக்கில் சீன ராணுவத்தால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொல்கத்தாவில் உள்ள ஜொமாடோ(Zomato) உணவு விநியோக தள ஊழியர்கள் சனிக்கிழமை தங்கள் சீருடைகளை கிழித்து எரித்துள்ளனர்.

ALSO READ | அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!! 

பெஹாலாவில் நடந்த போராட்டத்தின்போது, ​​அவர்களில் சிலர் ஜோமாடோவுக்கு கணிசமான சீன முதலீடு இருப்பதால் தாங்கள் வேலையை விட்டு விலகியதாகக் கூறி, நிறுவனம் வழியாக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினர்.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில், சீனாவின் அலிபாபாவின் நிறுவனம், ஜொமாடோவில் 14.0 சதவீத பங்குகளுக்கு வாங்குவதற்காக சுமார் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. உணவு விநியோக மேஜர் சமீபத்தில் கூடுதலாக 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது.

இந்நிலையில் சீன நிறுவனத்தின் முதலீட்டில் இயக்கும் ஜொமாடோ நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது தங்கள் பணிகளை துறக்க முன்வந்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது "சீன நிறுவனங்கள் இங்கிருந்து லாபம் ஈட்டுகின்றன, நம் நாட்டின் இராணுவத்தைத் தாக்குகின்றன. அவர்கள் நம் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது" என்று எதிர்ப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

மற்றொரு எதிர்ப்பாளர் "நாங்கள் பட்டினியாக இருக்கவும் தயாராக இருக்கிறோம், ஆனால் சீனாவிடம் முதலீடு பெறும் நிறுவனங்களில் வேலை செய்ய தயாராக இல்லை" என தெரிவித்தார். முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த மே மாதத்தில், ஜொமாடோ 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

ALSO READ | சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ட்ராகனை ஒழித்து கட்டும் திட்டம்...!!! 

இந்நிலையில் தற்போது நிறுவனத்திற்கு எதிராக உருவாகியுள்ள போராட்டத்திற்கு ஜொமாடோவிடம் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் ஏற்படவில்லை. மேலும் எதிர்ப்பை பதிவு செய்த குழு ஒன்றுதானா என்பது குறித்து உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னாதக கடந்த ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை அடுத்து இந்தியாவில் சீன பொருட்கள் மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது...

Trending News