அதிர்ச்சி தகவல்... அடி வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!

அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

Last Updated : Jun 27, 2020, 07:13 PM IST
  • அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
  • இந்த பெண்ணுக்கு மிகவும் அரிதான மரபணு கோளாறு, ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் (Androgen Insensitivity Syndrome) இருப்பது கண்டறியப்பட்டது.
  • இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி தகவல்... அடி வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!! title=

ஒரு மாதத்திற்கு முன்னதாக, ஒரு பெண், அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு பொதுவாக ஆண்களில் காணப்படும்  விதைப்பை புற்றுநோய் (testicular cancer) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த  வினோதமான சம்பவத்தில், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த 30 வயதான ஒரு பெண்ணுக்கு மிகவும் அரிதான மரபணு கோளாறு, ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் (Androgen Insensitivity Syndrome) இருப்பது கண்டறியப்பட்டது.  இதில்,  மரபணு ரீதியாக ஆணாக பிறந்த ஒருவருக்கு, ஒரு பெண்ணின் அனைத்து உடல் பண்புகளும் இருக்கும்.

உடனடியாக, அவருக்கு காரியோடைப்பிங் (Karyotyping) பரிசோதனை செய்யப்பட்டது, இது அவரது உடலில் இருந்த குரோமோசோம், பெண்களில் காணப்படும் ' XX ' க்கு பதிலாக ' XY '  என்று இருப்பது தெரியவந்தது. இந்த கோளாறு 22,000 பேரில் ஒருவருக்கு காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதாவது. அந்த குறிப்பிட்ட அந்த நபருக்கு ஒரு பெண்ணின் தோற்றம், ஒரு பெண்ணின் பிறப்புறுப்புகள், பழக்க வழங்கங்கள், உடல் மொழி ஆகியவை காணப்படும். ஆனால் கருப்பை  இருக்காது. அதனால், அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கோளாறு உள்ள பெண்களுக்கு, விந்தணுக்கள் இருக்கும். ஆனால் அவை வெளியில் தெரியாது. அவர்கள் பரிசோதிக்கப்படும் வரை அவர்களுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை. இதில் பரிசோதிக்கப்பட்ட இந்த பெண்ணின் சகோதரிக்கும் இதே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய  வகை உடல் கோளாறை நினைத்து அதிரிச்சியில், மனம் கலங்கி போயிருக்கும் இருக்கும் தம்பதியினருக்கு மருத்துவமனை அதிகாரிகள் ஆலோசனை வழங்குகிறார்கள். அந்த பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. தற்போது, ​​அவர் கீமோதெரபி (chemotherapy) கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராகவே உள்ளது.

Trending News