ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆளும் BJD-வின் தலைவராக இன்று தொடர்ந்து எட்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BJD தலைவர் பதவிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ஒரே தலைவரான பட்நாயக்கின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அதிகாரி பி.கே.டெப் அவர்களால் அறிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு ஒரிசாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் (BJD) வெற்றியைப் பெற்ற பின்னர் 73 வயதான தலைவர் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். டிசம்பர் 26, 1997-ஆம் ஆண்டு பிட்ஜு ஜனத் தளம் கட்சி துவங்கப்பட்ட நாள் முதல் பிராந்திய கட்சிகளின் முதல் கட்சியாக திகழ்ந்து வருகிறது. 


"BJD தேர்தலில் வெற்றிபெறவோ தோல்வியுற்றதாகவோ போராடவில்லை. இது மக்களின் அன்பையும் பாசத்தையும் வென்றெடுப்பதற்கும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்வதற்கும் போராடுகிறது" என்று திரு பட்நாயக் பிராந்திய அமைப்பின் தலைவராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கூறினார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "மாநிலத்தின் 4.5 கோடி மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


புவனேஸ்வரில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாநில சபைக் கூட்டத்தின் பின்னர், வெவ்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட BJD-வின் நிறுவன வாக்கெடுப்புகள் அறிவிப்புடன் முடிவடைந்தன.


355 சபை உறுப்பினர்களில் 80 பேர் மாநில நிர்வாக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிப்ரவரி 21 அன்று, கட்சி 33 நிறுவன மாவட்ட தலைவர்களின் பெயர்களையும் அறிவித்தது.


முன்னதாக கடந்த பிப்ரவரி 23 அன்று BJD-யின் உயர் பதவிக்கு ஒரிசா முதல்வர் பட்நாயக், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஒரே தலைவர் அவர். இதனையடுத்து BJD-யின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


பிராந்திய கட்சியின் சட்டத்தின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை BJD-வில் நிறுவன தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.