ரயில் விபத்து: மகனுக்கு பதில் வேறொரு உடலை தரும் அதிகாரிகள்! கதறு அழும் தாயின் கண்ணீர் கதை!
Odisha train accident: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழிந்த மகனின் சடலத்தை மாற்றி வேறு ஒரு உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனாலும் இன்னும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் பல குளறுபடிகள் நீடித்து வருகிறது. அப்படி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு அம்மாவிடம் வேறு ஒரு உடலை மகனின் உடல் எனச் சொல்லி எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து 280 பேருக்கு மேல் உயிரிழந்தனர். அதில் பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. அதோடு இறந்தவர்களின் உடல்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளதால், உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ரயில் விபத்தில் மகன், கணவன், மனைவி, அண்ணன் என சொந்தங்களை பறிகொடுத்த மக்கள் அவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் ஒரு வாரமாக அலைந்து வருவது கொடூரத்தின் உச்சமாக உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் தாய்
இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சபிலா முல்லா என்ற பெண்ணின் மகன் ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அந்தத் தாய், தனது மகனின் புகைப்படத்தோடு புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய 23 வயதான மகன் கடந்த வாரம் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்ததாகவும், அவரது புகைப்படத்தை இறந்தவர்களின் பட்டியலில் பார்த்த பிறகு சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவுக்கு வந்ததாகவும் கூறுகிறார்.
அதோடு மகனின் புகைப்படத்தின் கீழ் என் 9 என இருந்ததாகவும், ஆனால் இப்போது 111 என்ற எண்ணுடைய இளைஞரின் உடலை எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்துவதாகவும் அந்தத் தாய் கூறியுள்ளார். மேலும், தான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்றும், ஆனால் இந்துப் பெயருடைய ஒருவரின் உடலை எடுத்துச் செல்லச் சொல்லி அதிகாரிகள் தொந்தரவு செய்வதாகவும் வருத்தத்தோடு புலம்புகிறார்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்
எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள், தனது மகனின் உடலை வேறு யாருக்காவது மாற்றி கொடுத்திருக்க வேண்டும் அல்லது அவர்களே அந்த உடலை தூக்கி எறிந்திருக்க வேண்டும் என தனது வேதனையை மீடியாக்களிடம் பதிவு செய்துள்ளார். மருத்துவர்களிடம் டிஎன்ஏ சோதனை எடுக்கச்சொன்னதால் டெஸ்ட் எடுத்தனர். ஆனால் அதற்கான ரிசல்ட் வந்ததும் போன் செய்கிறோம் உங்கள் ஊருக்கு கிளம்புங்கள் என மனசாட்சியே இல்லாமல் கூறுகிறார்கள் எனவும் கண்ணீர் மல்க அழுகிறார்.
மகனின் உடலை பார்க்காமல் எப்படி சொந்த ஊர் திரும்புவது என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். இந்த சிக்கல் சபிலா முல்லாவுக்கு மட்டும் அல்ல. அவரைப்போல பலரும் தங்கள் சொந்தங்களின் உடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு பெண்ணும் தனது மருமகனின் உடலுக்கு பதில் வேறொரு உடலை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்வதாக வேதனைப்படுகிறார்.
இப்படிப்பட்ட துயரத்தில் கூட அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது அதிர்ச்ச்சியை ஏற்படுத்துகிறது. தெரியாத ஊருக்கு உறவுகளின் உடல்களை கடைசியாக பார்த்துவிட மாட்டோமா என்ற வலியுடன் காத்திருக்கும் அம்மா, அப்பாக்களின் கண்ணீருக்கு என்ன தான் பதில் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் ஏன் இத்தனை குளறுபடிகள் என்பதும் புரியாத புதிர் தான்.
மேலும் படிக்க | கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்தபோது ரயிலுக்குள் என்ன நடந்தது? பகீர் வீடியோ வைரல்
மேலும் படிக்க | ரயில்வே எடுத்த முக்கிய முடிவு, பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ