மகாராஷ்டிர மாநிலம், தானேவை அடுத்த ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது. கடந்த வியாழக்கிழமையன்று, காலை உணவுடன் சேர்த்து  தேநீர் வழங்காததால் கோபமடைந்த காசிநாத், துப்பாக்கியை எடுத்து தனது மருமகளை சுட்டுள்ளார். இதில், அப்பெண்ணில் அடி வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்


இச்சம்பவம் குறித்து காசிநாத் பாண்டுரங்கின் மற்றொரு மருமகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காசிநாத் பாண்டுரங் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR