பழைய ஓய்வூதியத் திட்டம்: சமீப நாட்களில் பழைய ஓய்வூயத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றிய பல விவாதங்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட்த்தியுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களில் பலர் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல வழிகளில் தங்களது கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி சில மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளன. இதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து விதிகளை காரணம் காட்டி இதை அமல்படுத்த மறுத்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடியே கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார்.


நடுநிலையான தீர்வை காண முயற்சி 


இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (OPS) தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (NPS) மத்தியில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே நடுநிலையைக் கண்டறிய மத்திய அரசு முயற்சிப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆதாரங்களின்படி, அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் முதல் விருப்பம் அரசு ஊழியர்களுக்கு NPS இன் கீழ் பெறப்பட்ட கடைசி ஊதியத்தில் சுமார் 50% உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்குவதாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | Army Agniveer: ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமா? இந்தத் தகுதிகள் இருந்தால் அக்னிபாத் அக்னிவீரர் நீங்களே!


கஜானாவுக்கு அதிக சுமை இருக்காது


இந்த விதி அமலுக்கு வந்தால், கருவூலத்தில் அதிக சுமையை ஏற்படுத்தாமல், தற்போதுள்ள என்பிஎஸ்-ல் மாற்றங்களைச் செய்யலாம். பழைய ஓய்வூதியத் திட்டம் முன் முடிவு செய்யப்பட்ட பலன்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டம் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்பின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்படுகிறது.


என்பிஎஸ் என்றால் என்ன


தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில், பயனாளிகள் ஓய்வு பெற்ற பிறகு முதலீடு செய்த தொகையில் 60% திரும்பப் பெற முடியும். இந்த தொகைக்கு அனைத்து வகையிலும் வரிவிலக்கு உண்டு. மீதமுள்ள 40% தொகையை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெற வருடாந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஓய்வு பெற்ற பிறகு, 60% மொத்த தொகையாகவும், 40% மாதாந்திர ஓய்வூதியம் பெறவும் முதலீடு செய்யப்பட வேண்டும். இத்திட்டம் 2004-இல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு, மொத்தத் தொகையாக 41.7% மற்றும் வருடாந்திர அடிப்படையில் மீதமுள்ள 58.3% தொகையைப் பெறும் வகையில் என்பிஎஸ்-இல் மாற்றம் இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய/மாநில அரசு பங்களிப்பில் (14%) உருவாக்கப்பட்ட 58.3% கார்பஸ் வருடாந்திரமாக இருந்தால், என்பிஎஸ்- இல் ஓய்வூதியமானது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50% ஆக இருக்கக்கூடும் என்றும் ஒரு பகுப்பாய்வு காட்டுகிறது.


மேலும் படிக்க | 7th pay commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், அகவிலைப்படியில் பம்பர் உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ