சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?
Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
Lok Sabha Speaker Election: 18ஆவது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார். பாஜக மீண்டும் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 24) ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. முதல்நாள் அன்று மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். அவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து, கூட்டத்தொடரின் முதலிரண்டு நாள்களிலும் மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்கள் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
46 ஆண்டுகளுக்கு பின்...
முன்னதாக மக்களவையின் அதிகாரமிக்க சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் (Lok Sabha Speaker Election) பாஜக சார்பில் ஓம் பிர்லா (Om Birla) போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பாஜகவிடம் எதிர்பார்த்த நிலையில், அதற்கான பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டது. பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், தற்போதைய மக்களவையின் மூத்த உறுப்பினருமான கொடிக்குன்னில் சுரேஷ் (Kodikunnil Suresh) சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டார்.
சபாநாயகர் வழக்கமாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றாலும் இந்த முறை தேர்தல் நடைபெற்றது. சுமார் 46 ஆண்டுகளுக்கு பின் மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஓம் பிர்லாவை சபாநாயகராக்கும் தீர்மானத்தை முதலில் பிரதமர் மோடி கொண்டு வந்த நிலையில், ராஜ்நாத் சிங் அதனை வழிமொழிந்தார். தொடர்ந்து, ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 15 தீர்மானங்கள் தேசிய ஜனயநாக கூட்டணியை சேர்ந்தவர்களால் முன்மொழியப்பட்டன. இந்திய கூட்டணியின் வேட்பாளரான கொடிக்குனில் சுரேஷிற்கு ஆதரவாக 3 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தற்காலிக சபாநாயகர் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்தலை நடத்தினார்.
ஓம் பிர்லா மீண்டும் தேர்வு
சபாநாயகர் தேர்தலில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 297 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி வேட்பாளரான கொடிக்குன்னில் சுரேஷிற்கு 232 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அதன்மூலம், குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானார்.
இதனை மக்களவையில் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு வர அவர் அழைப்பும் விடுத்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சபாநாயகர் இருக்கை வரை ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று, அவரை அமரவைத்து கைக்குழுக்கிவிட்டு வாழ்த்து தெரிவித்து திரும்பினர். தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் உரையாற்றினர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் ஏன்... கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ