இந்தியாவில் சதமடித்தது ஒமிக்ரான் தொற்று: பரவும் வேகத்தால் அதிகரிக்கும் அச்சம்
ஓமிக்ரான் நோய்த்தொற்று இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், உலக மக்களின் பீதிக்கான சமீபத்திய காரணமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவிலும், ஓமிக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், ஓமிக்ரான் மாறுபாட்டால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சதமடித்துள்ளது.
இந்த நோய்த்தொற்று இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 101 பேருக்கு ஓமிக்ரான் (Omicron) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பாதிப்புகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மற்ற மாநிலங்களில், ராஜஸ்தானில் 17 பேருக்கும், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா எட்டு பேருக்கும், குஜராத் மற்றும் கேரளாவில் தலா ஐந்து பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவல்களை தெரிவித்தார்.
ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்!
மேலும், உலகளவில் ஓமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இங்கிலாந்தில் (England) இந்த புதிய மாறுபாட்டால் மொத்தம் 11,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டென்மார்கில் 9,009 பேரும் நார்வேயில் 1,792 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
இந்த மாறுபாடு முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில், இதுவரை 1,247 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பெல்ஜியம் போன்ற பிற முக்கிய நாடுகளில் 500-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், புதிய திரிபு பற்றிய உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய புதுப்பித்தல்களையும் அகர்வால் எதிரொலித்தார்.
டெல்டா மாறுபாடு குறைவாக உள்ள தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் வேகமாக பரவி வருவதாகவும், டெல்டா புழக்கம் அதிகமாக உள்ள இங்கிலாந்திலும் ஓமிக்ரான் அதிகமாக பரவி வருவதாக ஐநா சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ALSO READ | Omicron அச்சத்துக்கு மத்தியில் ஆப்பிரிக்காவில் பரவும் மர்ம நோய்: 80 பேர் பலி!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR