புதுடெல்லி: ஓமிக்ரான் வைரஸுக்கு எதிராக மிகவும் பயனுள்ள தடுப்பூசி பூஸ்டர் ஷாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. SII தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், போதுமான தரவுகளின் அடிப்படையில், பூஸ்டர் தடுப்பூசி என்பது ஆன்டிபாடிகளை அதிக அளவில் அதிகரிப்பதற்கான நிரூபிக்கப்பட்ட உத்தி எனக் கூறினார். மேலும், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசிகள் அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று பூனாவாலா கூறினார்.
"தொற்று நோய் பரவல் தொடங்கிய இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்தியா (India) இப்போது அதனை கையாள சிறப்பான வகையில் தயாராக உள்ளது என்றும், சுகாதார அமைப்பை மேம்படுத்த இந்திய அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் போதுமான வசதிகளை மேம்படுத்தியுள்ளது" என்று ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் (DPIIT) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் CII பார்ட்னர்ஷிப் உச்சிமாநாட்டில் அவர் பேசினார்.
கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதற்கும் தயாரிப்பதற்கும் ஆன பணியில், வேகமாக மாறிவரும் சூழ்நிலையின் காரணமாக இதுவரையிலான பயணம் தங்களுக்கு பல முக்கிய படிப்பினைகளை வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இந்த '5' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!!
பூனாவல்லா கூறுகையில், உலகளவில், தடுப்பூசிகளின் விநியோகம் அதன் தேவையை விட அதிகமாக உள்ளது. "இதே வேகத்தைத் தொடர, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளின் உற்பத்திக்கான நிலையான விதிகளை ஏற்படுத்துவதில் நாடுகள் ஒன்றிணைந்து சில ஒப்பந்தங்களைமேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து, SII, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த 6 மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராகி விடும்," என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிப்பதில் இந்திய அரசின் பங்கைப் பாராட்டிய அவர், வணிகச் சூழலை மேலும் மேம்படுத்தவும், உற்பத்தியாளர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தவும் அரசும் தொழில்துறையும் இன்னும் நெருக்கமாகச் செயல்பட வேண்டும் என்றார்.
சிஐஐ நிறுவனத்தின் இந்தியா@75 இயக்க கவுன்சிலின் தலைவரும், ஜெட்லைன் இண்டஸ்ட்ரீஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜன் நவனி, Omicron உலகிற்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். 2008 முதல் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் CII மேற்கொண்டு வரும் இந்தியா@75 பிரச்சாரத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
ALSO READ | Omicron: பகீர் தகவல்! ‘இந்த’ நாட்டில் ஓமிக்ரானால் 75000 பேர் இறக்கக்கூடும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR