பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்றைய தினம் இந்தியாவின் இறையாண்மையை பயங்கரவாதம் சவால் செய்தது, எந்தவொரு பயங்கரவாதியையும் உயிரோடு வர திரும்ப எங்கள் பாதுகாப்புப் படைகள் அனுமதிக்கவில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான  நடவடிக்கைகள் பல மாற்றங்களுடன் வலுவாக உள்ளதால், 26/11 (Mumbai Terror Attack) போன்ற தாக்குதல் இனி சாத்தியமில்லை. இந்தியா தனது பாதுகாப்பை பெரிதும் பலப்படுத்தியுள்ளது என்பதால், அனைத்து மக்களுக்கும் நம்மால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்  என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)  என்றார்.  தற்போதும் அதே போன்ற திட்டத்துடன் நாட்டிற்கு வந்தனர். ஆனால்,  நமது நாட்டின் இராணுவம், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சேர்ந்து பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு, அனைவரையும் கொன்று, பாகிஸ்தானின் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சியை  தடுத்துள்ளனர்.


இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, எல்லைகள் வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் (India) ஸ்திரமின்மைக்கான சூழ்நிலையை உருவாக்குவது இந்திய எதிர்ப்பு சக்திகளின் தொடர்ச்சியான முயற்சியாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து பாடம் கற்பித்தது. 


ALSO READ | பிரதமர் மோடி SII-ன் Covishield தயாரிப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய உள்ளார்


பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இப்போது, ​​இந்தியாவின் எல்லைகளுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தேவைப்பட்டால் அதே போல் எல்லையைத் தாண்டி, பயங்கரவாத இலக்குகளை அழிக்கும் பணியையும் ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர் என்றார். அதனால், திருந்துங்கள், இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்கமாக எச்சரித்தார்.


மேலும் இந்தியா, பாகிஸ்தான் மீது உலக அளவில் ஒரு இராஜதந்திர அழுத்தத்தை உருவாக்கியுள்ளது, இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பேணி வளர்ப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய மன்றத்தில் நமது பிரதமர் உருவாக்கிய பொது கருத்தின் விளைவாக, FATF -ன் கத்தி பாகிஸ்தானின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். 


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் (China) இடையிலான இந்த எல்லை மோதலானது அமைதியானதாகவும் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தான் இந்தியா விரும்புகிறது. இராணுவத் தளபதிகள் இராஜீய நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், ஆனால் இந்தியாவின் எல்லை, இறையாண்மை, சுய மரியாதை ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.


ALSO READ | மும்பை பயங்கரவாத தாக்குதல் காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது: பிரதமர் மோடி 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR