பிரதமர் மோடி SII-ன் Covishield தயாரிப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய உள்ளார்

COVID-19 தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய பிரதமர் மோடி நவம்பர் 28 அன்று புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு (Serum Institute) செல்ல உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 08:05 PM IST
  • பிரதமர் மறு ஆய்வு செய்ய உள்ளார் என்ற தகவலை புனே (Pune) மாவட்ட ஆணையர் சவுரவ் ராவ் உறுதிப்படுத்தினார்.
  • இந்த வார தொடக்கத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதார் பூனவல்லா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை 2021 ஜனவரி மாதத்திற்குள் இந்தியா பெறலாம் என்று அறிவித்தார்.
பிரதமர் மோடி SII-ன் Covishield தயாரிப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய உள்ளார் title=

பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) சனிக்கிழமை புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு (SII) பயணம் செய்வார். இந்தியாவில் COVID-19 தடுப்பூசியான “கோவி ஷீல்ட்” (Covishield) மருந்தை,  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாவுடன் (AstraZeneca) இணைந்து தயாரிக்கிறது

இந்தியாவில் COVID-19 தடுப்பூசி மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக SII,  ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் (AstraZeneca) கூட்டு சேர்ந்துள்ளது.

பிரதமர் மறு ஆய்வு செய்ய உள்ளார் என்ற தகவலை புனே (Pune) மாவட்ட ஆணையர் சவுரவ் ராவ் உறுதிப்படுத்தினார், நவம்பர் 28 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த நிறுவனத்திற்கு வருவார் என்று கூறினார். 

ALSO READ | கொரோனா சிகிச்சையில் ஆயுஷ் மருந்துகள் நல்ல பலன் கொடுக்கிறது: ஆய்வு

கோவிஷீல்ட் (Covishield) தற்போது மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதோடு, 70 சதவீத தடுபாற்றலை கொண்டுள்ளது. சில குறிப்பிட்ட விழிமுறையில், COVID-19 ஐ தடுப்பதில் இது 90 சதவீதம் தடுப்பாற்றலை கொண்டுள்ளதாக உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதார் பூனவல்லா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை 2021 ஜனவரி மாதத்திற்குள் இந்தியா பெறலாம் என்று அறிவித்தார்.

கொரோனா வைரஸிற்கான (Coronavirus) ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒரு மருந்தகத்தில் இருந்து வாங்கினால் ரூ .1,000 வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், மருந்து நிறுவனம் சப்ளை செய்யும் தடுப்பூசி மருந்தில் 90 சதவீதத்தை அரசு 250 ரூபாய்க்கு வாங்கும் என்றும் கூறினார்.

மற்ற இரண்டு தடுப்பூசிகள் - ஸ்பூட்னிக் (Sputnik ) மற்றும் மாடெர்னா (Moderna) ஆகியவையும் மூன்றாம் கட்ட சோதனைகளில், நல்ல முடிவை கொடுத்துள்ளன. இவை அனைத்தும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேரை இந்த வைரஸ் நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றன.

ALSO READ | மும்பை பயங்கரவாத தாக்குதல் காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது: பிரதமர் மோடி 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News