சுதந்திர தினம் 2020: மூவர்ண கொடி தொடர்பான அரிய தகவல்கள்
இந்த 74வது சுதந்திர தினத்தில், நமது மூவர்ண கொடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாமா....
நாளை சுதந்திர தினம். பல போராட்டங்கள் உயிர் தியாகங்களுக்கு பிறகு பல ஆண்டுகளாக அடிமை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த இந்தியா, அதை உடைத்தெறிந்த நாள்.
இந்த 74வது சுதந்திர தினத்தில், நமது மூவர்ண கொடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாமா....
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராரும் விவசாயியுமான பிங்காலி வெங்கய்யா அவர்கள்.
இந்திய சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் மிகவும் ஆடம்பரமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைப்பார்.
இந்தியாவின் தேசியக் கொடி நாட்டின் அனைத்து குடிமக்களின் பெருமையும், நம்பிக்கைகளையும், பிரதிபலிக்கிறது. அப்படிப்பட சிறப்பு வாய்ந்த நமது தேசிய கொடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும் விவசாயியுமான பிங்காலி வெங்கய்யா ஆவார்.
2. ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயா ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு, 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக்க் கொடி இந்தியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
3. முதல் இந்தியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
4. தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது, வெள்ளை நிறம் உண்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. கொடியில் உள்ள பச்சை நிறம் செழிப்பைக் குறிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்ம விதிகளை குறிக்கிறது
5. தேசியக் கொடியில் நடுத்தர வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் அசோக சக்கரம் உள்ளது
6. இந்தியாவின் தேசியக் கொடி சட்டப்படி, காதி, ஒரு சிறப்பு வகை கையால் நெய்யப்பட்ட பருத்தி அல்லது பட்டினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்
7. கொடியை தயாரிப்பதற்கான உரிமை காதி அபிவிருத்தி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்திடம் உள்ளது.
8. டென்சிங் நோர்கே இந்திய தேசியக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக 29 மே 1953 அன்று ஏற்றினார்.
ALSO READ | நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி
9. 2002 க்கு முன்னர், இந்தியாவின் சாதாரண குடிமக்கள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைத் தவிர, வேறு சந்தர்ப்பப்க்களில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் கொடி சட்டத்தை திருத்தி, உரிய நெறிமுறைகளை கடைபிடித்து, எந்த நேரத்திலும் கொடியை ஏற்றலாம் என அனைத்து குடிமக்களுக்கும் உரிமைகளை வழங்கியது.
10. கொடி ஏற்றுதல் தொடர்பான நெரிமுறைகளின் படி, கொடி பகல் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். தேசிய கொடிக்கு மேல் வேறு எந்த அடையாளமோ அல்லது வேறு எந்த கொடியோ இருக்கக்கூடாது.