வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்ப்பவரா நீங்க.. வரி விதிப்பு அதிகமாகலாம் கவனமா இருங்க..!!!

வீட்டிலிருந்து வேலை செய்வதால் சில ஊழியர்களுக்கு வருமான வரி அதிகரிக்கும் நிலை உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 06:35 PM IST
  • இது கொரோனா காலம். மூன்றாம் கட்ட அன்லாக் தொடங்கி விட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரவில்லை.
  • பலர், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள், நகரத்தில் தனியாக வசிப்பவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர் சென்றுள்ளனர்.
  • கொரோனா காரணமாக இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் சொந்த வீடுகளிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றால், எந்தவொரு விலக்குகளும் கிடைக்காது.
வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்ப்பவரா நீங்க.. வரி விதிப்பு அதிகமாகலாம் கவனமா இருங்க..!!! title=

இது கொரோனா காலம். மூன்றாம் கட்ட அன்லாக் தொடங்கி விட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரவில்லை. கொரோனா பரவலும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வொர்க் ஃப்ரம் ஹோம் என்பத்து பல நிறுவனங்களில் அத்தியாவசியமானதாகி விட்டது. ஐடி ஊழியர்களுக்கு டிசமபர் மாதம் வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர். 

இந்நிலையில், பல ஊழியர்கள், குறிப்பாக, குடும்பத்தை விட்டு தனியாக இருக்கும் ஊழியர்கள் பலர் சொந்து ஊருக்கு சென்று, அங்கிருந்து வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். 

வருமான வரியை பொருத்தவரை, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) என்பது ஊழியர்கள் செலுத்தும் வருமான வரியில் பெரும்  முக்கிய விலக்குகளில் ஒன்றாகும், இது அவர்களின் வரியை குறைக்க உதவுகிறது.

இங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு தனது குடும்பத்துடன்  தங்கியிருக்கும் காலங்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு கோர முடியாது, இது அந்த ஆண்டிற்கான வரி அதிகரிக்கலாம்.

HRA எவ்வாறு கணக்கிடப்படுகிறது, நீங்கள் அதற்கு  முடியாவிட்டால் வரி பொறுப்பு எவ்வாறு அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம்.

ALSO READ | பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

HRA கணக்கீடு

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (13 ஏ) இன் கீழ், சம்பளத்தில் கொடுக்கப்பட்டும்  வீட்டு வாடகை கொடுப்பனவிற்கு ஒரு ஊழியர் தான் வாடகையாக செலுத்தும் தொகைக்கு, விலக்கு  கோரலாம்.  நீங்கள் வசிக்கும் நகரம் மாநகரமா அல்லது நகரமா என்பதை பொறுத்து உண்மையான வாடகை அல்லது HRA க்கு நீங்கள் வருமான் வரி விலக்கு கோரலாம்.

HRA க்கு கீழ்கண்ட தொகையில் எது குறைவோ அந்த தொகைக்கு விலக்கு கோர்லாம்

1. கிடைக்கும் HRA தொகை

2. மெட்ரோ அல்லது மெட்ரோ அல்லாத நகரங்களில் சம்பளத்தில் 50% அல்லது 40% 

3. அடிப்படை சம்பளத்தின் 10% க்கும் அதிகமாக கொடுக்கப்பட்ட வாடகை.

வீட்டை காலி செய்து கொண்டு தனது குடும்பத்துடன்  தங்கி வேலை பார்ப்பவர் என்பதால், வாடகை செலுத்தப்படாத மாதங்களுக்கு பெறப்பட்ட HRAக்கு வரி விலக்கு பெற இயலாது. 

ஒரு நபர் மாதம் வீட்டு வாடகை கொடுப்பனவாக ஒன்றுக்கு ₹ 15,000  பெறுவதோடு, அதற்கு சமமான தொகையை வாடகையாக செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். தற்போதுள்ள நிலையில் ​​அவர் ஒன்பது மாதங்களுக்கு வாடகை செலுத்தவில்லை என்றால், 2020-21 நிதியாண்டில், அவரது வரிவிதிப்பு வருமானம் ₹ 1,35,000 ஆக உயரும்.  இந்த குறிப்பிட்ட நபர், 20% வரி விதிப்பி பிரிவில் இருந்தால், செலுத்தும் வரி 27000 ரூபாய் அதிகரிக்கும்.

ALSO READ | திரு.பிரணாப் முகர்ஜீ குறித்த போலி செய்தியை பதிவிட்ட பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் ..!!!

ஆனால் சுமையை பகிர்ந்து கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினருக்கு நீங்கள் வாடகை செலுத்துகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் வரி விலக்கு கோரலாம். தொகையைப் பெறும் உறவினர் அதை வருமானமாக அறிவித்து, அவர் அல்லது அவள்  அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக  இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் சொந்த வீடுகளிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றால், எந்தவொரு விலக்குகளும் கிடைக்காது. இதன் விளைவாக, அத்தகைய நபரின் வரி அதிகரிக்கும்.

எனவே வொர்க் ஃப்ரம் ஹோம், அதாவது, வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், இதனை மனதில் வைத்துக் கொண்டு, இதற்கு ஏற்றவாறு திட்டமிடுவது நல்லது.

Trending News