நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துவோரை  கவுரவிக்கும் வகையில்  Honoring The Honest திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 01:05 PM IST
  • நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
  • நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை நிலை மாறும் போது இந்தியா முன்னேறும் என அவர் குறிப்பிட்டார்.
  • இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி title=

நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை வீடியோ கான்ஃபரென்ஸிங் மூலம் தொடக்கி வைத்தார். வரி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் வரி செலுத்தும் முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரும் என்றார்.

 இதன் கீழ், faceless assessment, அதாவது வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும் இடையில் மனித தலையீடுகள் இல்லாமல், கணிணி மூலமாக தொடர்பை ஏற்படுத்தும் திட்டம். இதன் மூலம் வருமான வரி தாக்கம் செய்யும் முறையில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். 

ALSO READ | H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்: US

இதனால், வரி கணக்குகளை சரி பார்ப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாது. வரி செலுத்தும் முறையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம் ஆகும். மேலும்  வரி செலுத்தும் மக்கள் மனதில் உள்ள பயம் நீங்கும்.

நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை நிலை மாறும் போது இந்தியா முன்னேறும் என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ALSO READ | கீரனூர் பெண் இன்ஸ்பெக்டருக்கு உள்துறை அமைச்சக விருது: தமிழகத்தின் பெருமை எம்.கவிதா!!

இந்த நிகழ்ச்சியில் நேர்மையாக வரிசெலுத்துவோருக்கான வெளிப்படையான வரி செலுத்தும் முறை “ Transparent Taxation – Honoring the Honest “ என்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.

Trending News