சபரிமலை ஐயப்பன் கோவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மேலும் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதேபோல் ஸ்பாட் புக்கிங் வசதிக்காக நிலக்கல்லில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும். 


மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்


அதேபோல் சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். பரசுராமர் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி பிரதிஷ்டை செய்தாக தல வரலாறு கூறுகிறது.


இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.


அத்துடன் வருகிற 10 ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. மேலும் சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் வரும் 10 ஆம் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது.


அதேபோல் இந்த நாட்களில் வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மேலும் கோவில் நடை இரவு 9 மணிக்கு நடை மீண்டும் சாத்தப்படும். நாளை தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 8 ஆம் தேதி திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும் எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR