Who Next Chief Minister Maharashtra: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான நகர்வுகள் தீவிரமடைந்து உள்ளன. அந்த பதவிக்கு தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாபீஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி


மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற இரு கட்சிகளை விட பாஜக அதிக இடங்களை வென்றுள்ளதால், அதற்கே முதலமைச்சர் பதவி செல்லும் என்றும், துணை முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் ஆவார் என்பதும் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


முதலமைச்சர் பதவி யாருக்கு?


தற்போதுள்ள ஆட்சியில் பாஜகவுக்கு அதிக இடங்கள் இருந்தாலும், குறைவான இடங்களை கைவசம் வைத்திருந்த சிவசேனா கட்சியின் சிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. இந்தமுறையும் மீண்டும் அதே நிலைப்பாட்டை எடுத்தால் பாஜாகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது. மேலும் மராத்தா சமூகம் அல்லாத பட்னாவிஸ் முதல்வர் ஆவதற்கு அஜித் பவாரின் முழு ஆதரவு இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரம் ஏக்நாத் சிண்டே தந்த சிறப்பான ஆட்சிதான் பாஜக அணியின் வெற்றிக்கு உதவியதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். 


அடுத்த கட்ட நகர்வுகள்


இப்படி பெரிய குழப்பத்திற்கு மத்தியில், கூட்டணியில் பாஜகவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கை கிடைத்துள்ளது, மறுபுறம் அஜித் பவாருக்கும் கணிசமான இடங்கள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி கொடுக்க ஷிண்டே தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பட்னாவிசை பாஜக தேசிய இணை பொதுச்செயலாளர் சிவபிரகாஷும், மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன் குளேவும் சந்தித்து அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். 


நெருக்கடியில் பாஜக கூட்டணி


தற்போதைய சட்டப்பெறவை பதவிகாலம் செவ்வாய்க்கிழமை முடிய உள்ள நிலையில் புதிய முதலமைச்சரை விரைந்து தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியும் பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.


மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்?


இன்று மகாராஷ்டிரா புதிய முதல்வரின் பெயரை மகாயுதி அறிவிக்கலாம். 1 முதல்வர், 2 துணை முதல்வர்கள் என்ற பார்முலா முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


அமைச்சர் பதவி ஃபார்முலா


6-7 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற ஃபார்முலாவும் மஹாயுதி கட்சிகளில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்படி பாஜகவின் 22-24 எம்எல்ஏக்களும், ஷிண்டே குழுவின் 10-12 எம்எல்ஏக்களும், அஜித் குழுவின் 8-10 எம்எல்ஏக்களும் அமைச்சராகலாம்.


அஜித் பவார் முதல்வராக வேண்டும்


மகா கூட்டணி அரசின் முதல்வராக அஜித் பவார் வர வேண்டும் என்று என்சிபி அஜித் பிரிவு தலைவர் சகன் புஜ்பால் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். சட்டமன்ற கட்சி தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுள் உளார்.


149 இடங்களில் போட்டியிட்ட பாஜக அதிகபட்சமாக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மகாயுதி கூட்டணி 288 இடங்களில் 230 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜகவின் ஸ்ட்ரைக் ரேட் 88% ஆக இருந்தது. 


மேலும் படிக்க - மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? ஏக்நாத் ஷிண்டே vs தேவேந்திர ஃபட்னாவிஸ்


மேலும் படிக்க - Maharashtra Election Results 2024 | மோடி கூட்டணிக்கு பெரிய வெற்றியை பரிசாக அளித்த மகாராஷ்டிரா மக்கள்


மேலும் படிக்க - யார் இந்த கல்பனா சோரன்? வெறும் 250 நாட்கள்.. ஜார்க்கண்டின் சிங்கப் பெண்ணாக மாறியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ