முஷாபர் நகர்: உத்திரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் இன்று காலை நிகழ்ந்து சாலை விபத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே பலியானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசத்தின் முஷாபர் நகர் பகுதிக்கு உட்பட்ட சதேப்பூர் பகுதியில் ட்ராக்டர் ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விழாயன் அன்று இரவு நடைப்பெற்ற இச்சம்பவம் பெஷூமா சாலை பகுதியில் நிகழ்ந்ததாக உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


விபத்திற்கான காரணம் குறித்து சரியான காரணங்கள் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிகழ்ந்தா, இல்லை வேறு எதேனும் காரணத்தால் விபத்து நிகழ்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.