இந்தியாவின் மிகப் பெரிய குறியாக்கப் பரிமாற்ற நாணையமான Zebpay இந்தியாவில் தனது சந்தையினை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Bitcoin உள்ளிட்ட Cryptocurrency-க்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி சொந்தமாக Digital கரன்சியை அறிமுகப்படுத்து சாத்தியகூறுகளை குறித்து ஆராய முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா இணைய சந்தையில் வினியோகம் நடத்தி வந்த Cryptocurrency-கள் ஒவ்வொன்றாக தங்களது சந்தையினை முடக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Zebpay தனது சத்தையினை முடக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது.


"வங்கிக் கணக்குகளில் எங்கள் வாடிக்கையாளர்களின் Zebpay பரிமாற்றங்கள் முடக்கப்பட்டுவிட்டது. வணிக ரீதியாக வியாபாரமாக செயல்படும் திறனனை இழந்துள்ள Zebpay-வினால் ஒரு நியாயமான வழி கண்டுபிடிக்க முடியவில்லை, இதன் விளைவாக, இந்தியாவில் நாங்கள் எங்களது பரிமாற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வருகிறோம் என இதுகுறித்து Zebpay தெரிவித்துள்ளது.


#Cryptocurrency...


Cryptocurrency எனப்படுவது இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கண்ணுக்குத் தெரியாத பணம் ஆகும். இந்த பணத்தினை நேரடியாக பயன்படுத்த இயலாது, இணையத்தில் மட்டுமே பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.


உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அவரகளது பொருளாதார மதிப்பிற்கு ஏற்றவாரு நாணயங்களை அச்சடித்து பயன்படுத்திக் கொள்கின்றோம். இந்தியாவில் ரூபாய், அமெரிக்காவில் டாலர் என இருப்பது போல்.


இந்த அச்சிட்ட நாணயங்களுக்கான மதிப்பு நாட்டிற்கு நாடு மாறுபடும், ஆனால் இந்த Cryptocurrency மதிப்பானது இணைய நாணயம் என்பதால் உலகம் முழுவதும் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும். நாட்டிற்கு நாடு மாறுபடாது. இதனால் பெரும் புள்ளிகள் பலரும் தங்கள் கருப்பு பணத்தினை பயன்படுத்தி இந்த Cryptocurrency-களை வாங்க போட்டியிட்டு வருகின்றனர்.


இந்த Cryptocurrency-ன் ஒருவகை தான் Bitcoin ஆகும். Litecoin, Ethereum, Zcash, Ripple போன்ற வேறு பல Cryptocurrency நாணயங்களும் இருக்கின்றன. உலக அளவில் 11% இந்தியர்கள் இந்த Cryptocurrency-ல் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.