ரயில் நிலையங்களில் ரூ.,1 சிகிச்சை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் ரூ.,1 ஒரு பாட்டில் தண்ணீர் தர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 


ரூ.,1 கிளினிக் மேற்கு ரயில்வேக்கு சொந்தமான 10 ரயில் நிலையங்களில் செயல்பட உள்ள இதற்கு, ‘ஒரு ரூபாய் கிளினிக்' என பெயரிடப்பட்டுள்ளது. 


பிபி செக்அப், ஃபிரி ரத்த அழுத்த பரிசோதனை, இலவசமாக செய்வதுடன் சர்க்கரை பரிசோதனைக்கு 25 ரூபாயும், இசிஜிக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மே மாதம் 10-ம் தேதி மும்பையில் உள்ள காத்கோபர் ரயில் நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக் தொடங்கப்பட்டது. அங்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்று குறிப்பிடத்தக்கது.