கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை  அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தால் கறுப்புப்பணம் தடுப்பு, தீவிரவாதிகளுக்கு நிதி தடை, அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை, வரி  கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கடன்களுக்கான வட்டி வீதம் குறைப்பு உள்ளிட்ட பல பயன்கள்  ஏற்பட்டுள்ளன. மேலும் இந்நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இது அரசியல்  தளத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. 


1000, 500 ரூபாய் நோட்டுக்கு தடையைத் தொடர்ந்து வங்கிகளில் வட்டி விகிதங்களை 1% வரை குறைக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தொகைகள் 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 4, 2017 வரை, 17.77 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 14.75 லட்சம் கோடி ரூபாயாக பணபரிவர்த்தனை குறைந்துள்ளது.


அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை குறைத்ததால், கறுப்பு பணம் பதுக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.


1000, 500 ரூபாய் நோட்டுக்கு தடைக்குப் பிறகு பணமில்லாத பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. 
அக்டோபர் மாதம் வரை சராசரியாக 136-138 மில்லியன் ரூபா டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யபட்டுள்ளது.


வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை 25.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 56 லட்சம் புதிய வரி செலுத்துவோர் இணைக்கப்பட்டுள்ளனர்.


1000, 500 ரூபாய் நோட்டுக்கு தடைக்குப் பிறகு 45 நாட்களில், ஜன்தன் கணக்கில் உள்ள தொகை 87,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


2016 நவ.,,ல் 46.03 லட்சமாக இருந்த மொபைல் வாலட்பரிவர்த்தனை, 2017 அக்., ல், 72.72 லட்சமாக அதிகரித்துள்ளது.
வீட்டுக்கடன் 2016 அக்., ல், 9.10 சதவீதமாக இருந்த வீட்டுக்கடன் வட்டி, 2017 அக்., ல், 8.30 சதவீதமாக குறைந்தது.