கட்டணத்தை உயர்த்திய Zomato, Swiggy! இனி உணவு ஆர்டர் செய்வது கடினம் தான்!
Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் பண்டிகை காலம் தொடங்கும் முன்பு தங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 10 ஆக உயர்த்தி உள்ளனர்.
இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களான Zomato மற்றும் Swiggy ஆகியவை தங்கள் சேவைக் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தியதால் உணவு பிரியர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், நிறைய பேர் கொண்டாட்டங்களுக்கு உணவை ஆர்டர் செய்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் கட்டணத்தை எதிர்பார்க்கவில்லை. Zomato நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2023ல் ஒவ்வொரு ஆர்டருக்கும் சேவைக் கட்டணமாக ரூ. 2 வசூலிக்கத் தொடங்கியது. பின்பு ஜனவரி 2024க்குள் அந்தக் கட்டணம் ரூ. 4 ஆக உயர்ந்தது, இப்போது ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.10 வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் ஆர்டர் செய்யும் அனைவருக்கும் பொருந்தும், நீங்கள் கோல்ட் உறுப்பினர்களாக இருந்தாலும் வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க | வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் சொத்து விவரம்!
சமூக ஊடகத் தளமான Xல், பலரும் இந்த புதிய கட்டணத்தைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டனர். பல Zomato மற்றும் Swiggyவில் இனி உணவை ஆர்டர் செய்யப்போவது இல்லை என்றும் பதிவு செய்து வருகின்றனர். இரு நிறுவனங்களையும் குற்றம் சாட்டி தங்கள் புகார்களை ஆன்லைனில் பலர் பகிர்ந்து கொண்டனர். ரவி சுதஞ்சனி என்ற நபர் சமூக ஊடகங்களில் இதைப் பற்றி பேசினார், அது விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. Swiggy Also Increased Platform Fee To ₹10
"முன்பு உணவுகளை ஆர்டர் செய்தால் எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி டெலிவரி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பேக்கிங் மற்றும் டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரிகள் மற்றும் பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டி உள்ளன" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார். "Zomato, Blinkit மற்றும் Swiggy போன்ற ஆப்ஸ்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன், ஏனெனில் அவை தொடர்ந்து அதிக செலவுகளை நமக்கு ஏற்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நியாயமற்றதாக உணர செய்கிறது. இந்த கூடுதல் கட்டணங்களை ஒரு மோசடி என்று தான் கூற வேண்டும்" என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.
"ஒரு செயலியைப் பயன்படுத்தி உணவை ஆர்டர் செய்ய விரும்பினால், உணவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும், மேலும் பயன்பாட்டிற்கு கட்டணத்தையும் செலுத்த வேண்டும், ஆப்ஸை பயன்படுத்த உணவகங்களும் பணம் செலுத்த வேண்டும், சில நேரங்களில் உணவகங்களில் இருந்து வரும் உணவை உண்பது உங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். "உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படும் செயலியான ஸ்விக்கி மற்றும் Zomato விரைவில் இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் டெலிவரி கட்டணத்தை விட அதிகமாக இருக்கலாம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ