ஆண், பெண் என இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநங்கைகள் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர் எனவும், இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள், லெஸ்பியன்கள், இருபாலரிடம் உறவு வைப்பவர்கள் ஆகியோர் சேர்க்கப்படமாட்டார்கள் என தெரிவித்து விட்டது.