ஆபரேஷன் காவிரி... முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க `ஆப்ரேஷன் காவிரி` செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சூடானில் மூண்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியரும் ஒருவரும் அடங்கும். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார். எனவே சூடானில் சிக்கியுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை மீட்க உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆப்ரேஷன் காவிரி' செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறி செல்ல கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்றும் இந்தியாவின் நடவடிக்கை நடந்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர். மீட்புப் பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது. "சூடானில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி எமேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக உள்ளன. சூடானில் உள்ள எங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம்" என்று ட்வீட் செய்துள்ளார். திரு ஜெய்சங்கர்.
மேலும் படிக்க | சூடானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர தயாராக உள்ள C-130J ராணுவ விமானங்கள்!
முன்னதாக, இந்தியா, விமானப்படை C-130J ஜெட்டாவில் தயார் நிலையில் இருப்பதாகவும், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் இந்திய நாட்டினரை பாதுகாப்பாக கொண்டு வர சூடான் துறைமுகம் அடைந்துள்ளதாகவும் அறிவித்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவை அடைந்தனர். சவுதி அரேபியாவைத் தவிர, இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அதில் இருந்தனர். சவுதி அரேபியாவால் அழைத்து வரப்பட்ட மூன்று இந்தியர்கள் சவுதி அரேபிய விமான நிறுவனத்தின் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலையில், இந்தியர்கள் உட்பட 28 நாடுகளில் இருந்து 388 பேரை பிரான்ஸ் வெளியேற்றியது. "பிரெஞ்சு வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. நேற்றிரவு, இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் இந்திய பிரஜைகள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை அழைத்து வரப்பட்டனர்" என்று இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் ட்வீட் செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ