போதைக்கு அடிமையான கிளிகள்! சோகத்தில் விவசாயிகள்!
ஒப்பியம் போதைக்கு அடிமையான கிளிகள் அதன் மொட்டுக்களை கொத்தி எடுத்துக் கொண்டு பறந்துவிடுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஒப்பியம் போதைக்கு அடிமையான கிளிகள் அதன் மொட்டுக்களை கொத்தி எடுத்துக் கொண்டு பறந்துவிடுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நாட்டின் சில இடங்களில் ஒப்பியம் செடிகளை மருத்துவப் பயன்பாட்டுக்காக உரிமம் பெற்று அனுமதியுடன் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள பாப்பி விவசாயிகள் இந்த பருவத்தின் பயிர்களை பயிரிடும்போது சில சிக்கல்களில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வீடியோ:- https://zeenews.india.com/tamil/videos/today-biral-video-in-sixmix-330545
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் விவசாயிகள் ஒப்பியம் செடிகளை வளர்த்து வருகின்றனர். சமீப காலங்களில் ஒப்பியம் மொட்டுக்களுக்கு அடிமையான கிளிகள், அவற்றை கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்றுவிடுகின்றன.
ஒரு பாப்பி மலர் சுமார் 20 முதல் 25 கிராம் அபின் கொடுக்கிறது. ஆனால் அந்த கிளிகள் இந்த செடிகளை நாளைக்கு 30 முதல் 40 முறை கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்றுவிடுகின்றன. இதனால் அங்கு உற்பத்தியாகும் இந்த செடி பாதிக்கிறது என்று விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
போதைப்பொருள் தவறு என்று சகாப்தம் சொன்னாலும், ஆனால் இந்த பறவைகளுக்கு யார் விளக்குவது. தற்போது வயல்களில் பயிர்கள் பூத்து குலுங்குகிறது. ஆனால் அப்பகுதியில் உள்ள கிளிகள் போதைக்கு அடிமையாகிவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அமைதியடையவும், அல்கலாய்ட்ஸ், ஸ்டீராய்ட்ஸ் மூலம் தூண்டப்பட்டும் கிளிகள் ஒப்பியம் மொட்டுக்களைத் தொடர்ந்து கொத்தி உண்ணுவதாகக் கூறப்படுகிறது. அந்த கிளிகளை விரட்ட பட்டாசுகள் வெடிப்பது, நாள் முழுவதும் காவலில் நிற்பது போன்றவற்றை செய்தாலும் அந்த கிளிகளை விரட்ட முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது போன்ற செயலால் அங்குள்ள விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.