எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 


எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று பா.ஜ.க சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டார். 


துணை குடியரசு தலைவர் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று, முன்னதாக வெங்கையா நாயுடு, இன்று தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, எதிர்கட்சி துணை குடியரசு தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.