சாதாரண மக்கள் அமைச்சர்களாவதை எதிர் கட்சிகளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை: PM Modi
பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்களும் முன்கூட்டியே நிறைவடைந்தது. மேலும் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால (Monsoon Session of Parliament) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிகிறது. இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இரு சபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். மேலும் மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
புதிய எம்பிக்கள் (MP) பதவி ஏற்ற பின் உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், அமைச்சர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை எனக்கூறியதோடு, பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷங்களை எழுப்பினர். இதைக் கடுமையாக கண்டித்து பேசிய பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர். இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்புகிறார்கள் என கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போது அவையில் எதிர் கட்சிகள் கோஷம் எழுப்பியதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கண்டித்தார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால, அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நடப்பதால், கொரோனா கால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். இரு சபைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.
ALSO READ | COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR