COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று  வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 01:11 PM IST
  • கொரோனா தயார் நிலை குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் உரையாடி வருகிறார்.
  • கொரோனா இரண்டாவது அலை பரவலில், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.
COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை  title=

கொரோனா தொற்று (Corona Virus)  பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று  வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.  இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை (Corona second wave) பரவலில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தற்போது படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும்,  மூன்றாவது  அலை ஏற்படலாம் என்ற அச்சம் உள்ள நிலையில்,   இதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் உரையாடி வருகிறார்.

முன்னதாக, கடந்த 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), 8 வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்ஸிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 

இன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில்  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநில முதலமைச்சர்களுடன், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ALSO READ | மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News