அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சமீபத்தில் சந்தித்து பேசினார். தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.


இவர்களை தொடர்ந்த கடந்த நவம்பர் 9-ஆம் நாள் தமிழக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலி அவர்களையும் சந்தித்தார். இந்நிலையில் நேற்று மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜியை சந்தித்து பேசினார். சுமார் ஒருமணி நேரம் நடைப்பெற்ற இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அப்போது பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் என மமதா பேனர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் வரும் நவம்பர் 22-ஆம் நாள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எதிர்கட்சிகள் கூட்டம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது எனவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் இக்கூட்டம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது தேர்தல் வேலைகள் நடைப்பெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஆளும் பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சி, பாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில் தற்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாஜக-விற்கு எதிராக எதிரணியை பலப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.