புதுடெல்லி: உலகில் வளர்ந்த நாடுகளும், வல்லராக உருவாகும் எண்ணம் கொண்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி-20 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா என பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து உள்ளதால் சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்பாக ஜி-20 கருதப்படுகிறது. இந்த ஆண்டு  ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால்,  இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வரவிருக்கும்  விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் வழங்கப்பட்ட அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.


நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து செய்து வருகின்றனர்.


காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய குடியரசுத் தலைவர் என்ற வார்த்தை மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். ஜெய்ராம் ரமேஷ், இந்தியா என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பாரத குடியரசுத் தலைவர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஜெய்ராம் ரமேஷின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ட்வீட் செய்துள்ளார். அவர் பாரத குடியரசு என்று  கூறுவதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். நமது நாகரிகம் அழியாத தன்மையை நோக்கி வேகமாக நகர்கிறது.


பாஜாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து அதற்கு I.N.D.I.A. என பெயரிட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை இந்த பெயரை வைத்து பாஜக தாக்கி வருகிறது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுதந்திர காலத்தில், அடிமை மனநிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் விடுவிக்கும் பணியில் ஈடுபட்ட மோடி அரசு, அடிமைத்தனம் தொடர்பான ஒவ்வொரு சின்னத்தையும் அகற்ற திட்டமிட்டுள்ளது. 


மேலும் படிக்க | G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்... எதிர்கட்சியினர் கண்டனம்!


செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா தொடர்பான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது, ​​பாஜகவின் மாநிலங்கள் அவை எம்பி நரேஷ் பன்சால், சிறப்புக் குறிப்பு மூலம், இந்தியா என்ற வார்த்தையை காலனித்துவ அடிமைத்தனத்தின் சின்னம் என்று வர்ணித்து, எனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துமாறு கோரினார். இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு, நாட்டின் பழங்காலப் பெயரான 'பாரத்' என்று அழைக்கப்பட  இதுவே சரியான நேரம் என்று பாஜகவின் பல பெரிய தலைவர்கள் நம்புகிறார்கள்.


மேலும் படிக்க | G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா... ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!


ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி, டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது


மேலும் படிக்க | BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி... கைவிட்ட சீனா, ரஷ்யா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ