Child Marriage: பாஜக ஆட்சி செய்துவரும் அசாம் மாநிலத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு, அரசு உத்தரவிட்டிருந்து. இதை தொடர்ந்து, போலீசாரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், போலீசாரின் இந்த தீவிர நடவடிக்கை குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், அது தொடர்புடையவர்கள் இதுவரை 1800-க்கும் அதிகமானோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 


குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நோக்கத்திலான இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், "பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத, கொடூரமான இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மை அற்ற வகையில் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்" என அசாம் முதலமைச்சர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 



மேலும் படிக்க | இரவில் நிர்வாணமாக வந்து வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் - திகில் சம்பவம்!


முன்னதாக, அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"அசாம் மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீசார், மாநிலம் முழுவதும் 4,004 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். வழக்குகள் மீதான நடவடிக்கை பிப்ரவரி 3 (அதாவது இன்று) முதல் தொடங்கும். அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 


14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது போக்சோ சட்டத்தின்கீழும், 14-18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அஸ்ஸாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 



குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்த போர், மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும், எந்த ஒரு சமூகத்தையும் குறிவைத்து இத்தாக்குதல் (நடவடிக்கை) நடைபெறாது என்றும் முதலமைச்சர் கூறினார். மதகுருமார்கள், பாதிரியார்கள் போன்ற திருமணங்களை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அசாமில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம், குழந்தை திருமணமாகும்."அதிக குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) முக்கிய காரணம் குழந்தை திருமணம் ஆகும். மாநிலத்தில் சராசரியாக 31 சதவிகிதம் தடைசெய்யப்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது," என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 


மேலும் படிக்க | சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ