புது டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மூன்று மாதங்களுக்கும் மேலாக காவலில் இருந்த பின்னர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) மாலை திஹார் சிறையில் இருந்து வெளியேறினார். "106 நாட்களுக்குப் பிறகு சிறைக்கு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார். சிறை வளாகத்திலிருந்து மகன் கார்த்தியுடன் வெளியேறினார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மை என்னவென்றால், "105 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகும் நாங்கள் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் இந்த நேரம் வரை என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட சுமத்தப்படவில்லை” என்று 74 வயதான காங்கிரஸ் தலைவர் கூறினார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஏனென்றால் உச்சநீதிமன்றம் அவருக்கு விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டினார்.


 



இன்று (புதன்கிழமை) காலை உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் வழங்கும் விசாரணையில், நீதிபதி ஆர் பானுமதியின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அவருக்கு உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 2 லட்சம் தனிநபர் பத்திரமும், அதே அளவு இரண்டு ஜாமீன்களும் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


எந்தவொரு பத்திரிகை நேர்காணல்களையும் அல்லது வழக்கைப் பற்றி எந்தவொரு அறிக்கையையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு உயர் நீதிமன்ற பெஞ்ச் அவருக்கு உத்தரவிட்டதுடன், சாட்சிகளை செல்வாக்கு செலுத்துவதற்கும் அல்லது சாட்சியங்களை கலைப்பதற்கும் எதிராகவும் எச்சரித்து உள்ளது.


இதனையடுத்து, அவர் 106 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நாளை ப.சிதம்பரம் நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வார் என அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். அவர் கலந்துகொள்வாரா? இல்லையா? என்று நாளை தான் தெரிய வரும். 


கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள் சிபிஐ காவல் முடிந்து மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுத்து ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. திமன்ற காவல் முடிந்ததால் மீண்டும் அவரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இப்படி ஒவ்வொரு முறையும் காவல் நீடிக்கப்பட்டது.


ப. சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து சிபிஐ தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இப்படி மாறி மாறி இருதரப்பினரும் மனுக்களை தாக்கல் செய்தனர். இறுதியாக இன்று அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.